டாப் கியரில் சரத்!
"போர் தொழில்' படம், சத்தமே இல்லாமல் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த நிலையில் அதில் நடித்த சரத்குமாருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன் பலனாக முன்பை விட அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸ் உள்ள கதாபாத்திரம் வந்து குவிகிறதாம். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புது படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கவிதாலயா நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் இப்படத்திற்கு "லக்கி சூப்பர் ஸ்டார்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உதய் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்க, படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தவிர ஆர்யாலிகவுதம் கார்த்திக் நடிக்கும் "மிஸ்டர் எக்ஸ்' படத்தில் சமீபத்தில் இணைந்தார். மேலும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ்முரளி மற்றும் அதிதிஷங்கர் நடிக்கும் பெயரிடாத படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விறுவிறு விஷ்ணு!
"லால் சலாம்', "மோகன்தாஸ்', "ஆர்யன்' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் விஷ்ணுவிஷால். மேலும் ராம்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இந்நிலை யில் "மரகத நாணயம்', "வீரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகி யுள்ளார். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதற்குள் விஷ்ணுவிஷால் ராம்குமார் படத்தை முடித்துவிடுவார் என்றும், ஏ.ஆர். கே.சரவன் "மரகத நாணயம் 2' படத்தை தொடங்கிய நிலையில் அதை முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_230.jpg)
"விடாமுயற்சி'யில் தமன்னா!
அஜித்தின் "விடாமுயற்சி' பல கட்டங்களாகத் திட்டமிட்டு கடைசிவரை படப்பிடிப்பு டேக் ஆஃப் ஆகவில்லை. கடைசியாக வந்த தகவலின்படி இம்மாத இரண்டாம்வாரத் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதுவும் தள்ளிப் போகிறதாம். இதனால் கமிட்டான பிரபலங்கள் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிவருகிறார்கள். அந்த வகையில் கதா நாயகியாக கமிட்செய்யப் பட்ட த்ரிஷா, அவர் நடிக்கும் மற்ற படங் களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் இப்படத் திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விலகிவிடும் சூழல் அவருக்கு ஏற்பட, அதை படக் குழுவிடம் இன்னும் சொல்லவில்லையாம். இந்தத்தகவல் படக்குழு தரப்புக்கு தெரிய வர... வேறு வழியில்லாமல் வேறு ஹீரோயினை தேடிவருகிறதாம். இப்போது யார் லைம் லைட்டில் உள்ளார் என பார்க்கையில் டப்பென்று அவர்களது வெளிச்சம் தமன்னா வுக்கு சென்றுள்ளது. "ஜெயிலர்' படம் வெளியாவதற்கு முன்பு "காவாலா...' மூலம் டிரெண்டிங்கில் இருக்கும் தமன்னா, படம் வெளியானால் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என பேச்சுக்கள் இருந்துவருகிறது. இதனால் தமன்னாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு. மேலும் "வி' சென்ட்டிமெண்ட், "வீரம்' படம் மூலம் ஆரம்பித்ததால் அதில் நடித்த தமன்னாவை அதே சென்டிமெண்டில் உருவாகும் "விடாமுயற்சி'யில் நடித்தால் அந்த வெற்றி கைகொடுக்கும் என கணக்கு போடுகிறதாம் படக்குழு.
கைகூடிய குத்தாட்டம்!
"புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அதனால் "ஊ...சொல்றியா' பாடல்போல் இப்படத்திலும் ஒரு பாடல் இடம்பெறும் நிலையில் அதில் குத்தாட்டம் போடவைக்க, மலைக்கா அரோரா, திஷா பதானி உள்ளிட்ட டாப் ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது கைகூடாமல் போக மீண்டும் சமந்தாவிடமே பேச்சுவார்த்தை நடந்தது. அவரும் சில காரணங்களைக் காட்டி கைவிட... பின்பு அது பற்றிய தகவலே வெளியாகாமல் இருந்தது. அண்மையில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கிட்டத்தட்ட அது கைகூடிவிட்டதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.
மேலும் சமந்தா, அந்த ஒரு பாடல் மூலம் பான் இந்தியா லெவலில் தனது இமேஜை உயர்த்தியதால், தானும் உயரவேண்டும் என நினைத்து அதற்கு ஓ.கே. சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, சமந்தா பிரபலமானதற்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து, முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியதால் அது பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ஆனால் தெலுங்கில் மட்டும் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா அதை பூர்த்தி செய்வாரா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் சினிமா தட்பவெட்பம் அறிந்தவர்கள். இதற்கிடையே, "படத்தின் கதாநாயகியே நான்தான்... என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை' என ராஷ்மிகா மந்தனா கடுப்பில் இருக்கிறாராம்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/cinema-t_0.jpg)